வருட பலன் தஜாக அல்லது தஜிக் முறை ஜோதிடம் ஆகும். பல எழுத்தாளர்களுடன் நீலகண்டன் ,கேசவன் ஆகிய இருபெரும் ஜோதிடர்கள் தஜிக் முறையைப் பற்றி விரிவாக எழுதி உள்ளார்கள்.
வருட ஜாதகத்தில், உச்சம் பெற்ற கிரகத்தை தவிர வருட லக்கினம் மற்றும் முந்தன், முந்த அதிபன், வருட தலைவர் ஆகியவையும் ஆராயப் பட வேண்டும்.
பராசர முறைக்கும் வருடபலன் முறைக்கும் ஜாதக ஆராய்ச்சியின் முறைகளில் மிகுந்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. கிரக பார்வை மற்றும் இணைவுகள் சம்பந்தப்பட்ட விதிமுறைகள் மேற்சொன்ன இரண்டு முறைகளிலும் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. கிரக வலிமையின் தீர்மானம் பராசர முறையிலுள்ள ஷட்பலத்தை விட பஞ்சாங்க பலத்தால் வேறுபடுகிறது.
No comments:
Post a Comment